Sunday, December 16, 2012

கெளதம் மேனனை மட்டும் குறை கூறுவது ஏன்?

நீ தானே என்  பொன் வசந்தம் படம் பற்றி பல் வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன . அதில் முக்கியமானது " இயக்குனர் திரு. கௌதம் வாசுதேவ் மேனன், படத்தில் ராஜாவின் பின்னணி இசைக்கு scope தரவில்லை" என்பதே.
இது தொடர்பாக Facebookல் தொடர்ச்சியாக வந்த, வந்து கொண்டிருக்கும் இடுகைகளுக்கு பதில் தர வேண்டியே  இப்பதிவை  நான் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
முக நூல் அன்பர்களுக்கு நான் விடுக்கும் கேள்விகள் இவையே
1) இயக்குனர் பாலா,  அவரின்  நான் கடவுள் படத்துக்கு அத்தனை பாடல்கள் வாங்கியும் , இரண்டே இரண்டு பாடல்களை தான் பயன்படுத்தினார்.(ஓம் சிவோ ஓம்  மற்றும் பிச்சை பாத்திரம்). அவரை பற்றி யாரும் எந்த  விமர்சனமும்  வைக்கவில்லை. பாலா தன்னுடைய பரதேசி படத்தின் ஒலிப் பேழை வெளியீட்டு விழாவில் சொல்லிய கருத்துகள் இவை
" எனக்கு situation சொல்லி பாடல் வாங்க தெரியாது. படத்தை முடித்துவிட்டு இசையமைப்பளாரிடம் போட்டு காட்டி பின்னர் அதற்கேற்ற பாடல்களை வாங்கி,  பின்னர் shoot செய்வதே என் வழக்கம்". இப்படி இருக்கும்போது அவர் எப்படி ராஜா கொடுத்த பாடல்களை படமாக்காமல் விட்டார்? இது ராஜாவுக்கு செய்த அவமரியாதையாகாதா ? படத்தில் பாடல் வைக்க scope இல்லை என்று பாலா நினைத்திருந்தால், ஏன் அத்தனை பாடல்களை வாங்க வேண்டும் (அ ) ராஜா தான் ஏன்  அத்தனை பாடல்களை கொடுக்க வேண்டும்?

2) இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய படமான நந்தலாலாவில் எத்தனை பாடல்களை படமாக்கினார் ? Situation சொல்லி பாடல்களை வாங்கியப்பின்  அதை படமாக்காமல் விடுவதென்பது, அந்த composerஐ அவமானப் படுத்தும் செயலேயன்றி வேறு ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு தோன்றவில்லையா ?

3) கெளதம் மேனன் நீ தானே பொன் வசந்தத்தை முடித்துவிட்டு வேறு ஒரு இசையமைப்பாளரிடம் பாடல்களுக்கு 6 மாதங்களுக்கு காத்திருந்து, பின்னர் அது நிறைவேறாமல் போனதால், பின்னர் ராஜாவிடம் வந்தார்.அதுவும் பாடல்களை துண்டு துண்டாக பயன்படுத்தவே அவர் விரும்பினார். ராஜா ஒரு situationக்கு கொடுத்த நான்கு வெவ்வேறு ட்யூன்களும் அவருக்கு பிடித்துப்போக அவர் பாடல்களை பின்னர் ஷூட்  செய்தார். உண்மை இவ்வாறு இருக்க கெளதம் மேனனை குறை  கூறுவது நியாயமா?

கெளதம் மேனன்  தன்னுடைய படத்தை பெரும்பாலும் முடித்துவிட்டு தான் ராஜாவிடம் வந்தார். முன்னமே ராஜா தான் இசை என்று தீர்மானித்துவிட்டு மேனன் script எழுதவில்லை. அவ்வாறு இருக்க BGMக்கு scope இல்லாமல் மேனன் காட்சிகளை படமாக்கி உள்ளார் என்று கூறுவது  நியாயமான கருத்து ஆகாது. ஏனெனில் மேனன் BGM scope உள்ள படங்கள் எடுப்பவர் அல்ல என்பதை அவரது முந்தைய படங்களை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம். அவர் இந்த படத்துக்கு ராஜா  தான் இசை என்று முதலில் முடிவு செய்திருந்து, பின்னர் இவ்வாறு காட்சிகள் அமைத்திருந்தால் அவரை குறை சொல்வதை நான் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

கெளதம் செய்தது போன்ற  மரியாதையை வேறு எந்த இயக்குனரும் தனக்கு செய்தது இல்லை என்று ராஜாவே கூறியுள்ளபோது, கௌதமை நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.

கௌதமை  ராஜா ரசிகர்கள்  பல பேருக்கு  முதலில் இருந்தே ஏனோ பிடிக்கவில்லை. அந்த வெறுப்பைத்  தான் இப்படி கொட்டித் தீர்க்கிறார்கள். உண்மையைப்  புரிந்துக் கொண்டு நீங்கள் பேசினால் நல்லது என்பதே என் வாதம். கௌதம், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்திய விதத்தை  வைத்தே அவர் ராஜா மீது எவ்வளவு அளப்பரிய அன்பு வைத்துள்ளார் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் .

No comments:

Post a Comment